வேலூர் எம்பி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டி

சென்னை,: உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ஆதிவாசி பொதுமக்கள் 10 பேர், வன்முறை கும்பலால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற நேரில் சென்ற பிரியங்கா காந்தியை ஆளும் பாஜ அரசு கைது செய்தது. இதை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் காஞ்சி வடக்கு மாவட்ட தலைவர் ரூபி மனோகரன் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் நேற்று பல்லாவரம் பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காஞ்சிபுரம் மாவட்டம் மட்டுமின்றி சென்னையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தொண்டர்கள் கலந்து கொண்டனர்.  முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது: வேலூரில் நடைபெற உள்ள தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். கர்நாடகத்தில் பாஜவினர் ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertising
Advertising

2 பிரிவுகளில் வழக்கு:

பல்லாவரத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காஞ்சி வடக்கு மாவட்ட தலைவர் ரூபி.மனோகரன் உள்ளிட்ட 250 பேர் மீது, பல்லாவரம் போலீசார், 143, 188 ஆகிய இரு பிரவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.

Related Stories: