அடையாரில் ஆசாமியை கொலை செய்த வழக்கில் பெண் வக்கீலை பிடிக்க தனிப்படை தீவிரம்: ஆண் வக்கீல் உதவியுடன் தொடர்ந்து பதுங்கல்

சென்னை: தொழிலதிபரை கூலிப்படை வைத்து கொலை செய்த பெண் வக்கீலை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அடையார் இந்திரா நகர் முதல் அவென்யூவை சேர்ந்தவர் சுரேஷ் பரத்வாஜ் (50). திருமணமாகாதவர். இந்நிலையில், தனது வீட்டில் வேலைசெய்யும் வேலைக்கார பெண் மேல் ஏற்பட்ட ஒருதலை காதலால் அவரிடம் தவறாக நடக்க முயற்சித்தாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் வேலையை விட்டு நின்றார். இதனையடுத்து, அந்த பெண்ணுக்கு  கொடுத்த ₹4 லட்சம் பணம் மற்றும் அந்த பெண்ணை சேர்த்து வைக்கோரி பெண் வக்கீல் ப்ரீத்தா என்பவரிடம் பரத்வாஜ் அணுகினார். அதன்பேரில் 65 லட்சம்பெற்றுகொண்டு இருவரையும் சேர்த்து வைக்காமல் பெண் வக்கீல் ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில், பரத்வாஜ் கொடுத்த பணத்தை கேட்கவே பெண் வக்கீல் அவரை கூலிப்படை வைத்து கொலை செய்து நடுக்கடலில் வீசினர்.

பரத்வாஜ் காணாமல் போனதாக அவரது சித்திகள் அடையார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் பரத்வாஜின் செல்போன் எண் ஆதாரங்களை வைத்து விசாரணை நடத்தியதில், கூலிப்படை தலைவன் பிரகாஷ் மற்றும் சுரேஷ் (40), மனோகர் (45), ராஜா  மற்றும் சதீஷ் உட்பட 6 பேரை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  மேலும் இதில் முக்கிய குற்றவாளியான பெண் வக்கீல் ப்ரீத்தியை தேடிவந்தனர். பெண் வக்கீல் ப்ரீத்தி திருமணமாகி கணவரை பிரிந்து தனது மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் மகள் என கூறப்படுகிறது. நடவடிக்கை சரியில்லாததால் வீட்டினரிடம் இருந்து விலகி தனியாக இருந்தார். இதனையடுத்து சென்னையில் உள்ள முக்கிய ஆண் வக்கீல் உதவியுடன் இவர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு தனிப்படையினர் விரைந்து சென்றனர் ஆனால் அங்கிருந்து அவர் தப்பிவிட்டார்.

Related Stories: