9 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு ஆயுள் தண்டனை உறுதி: கூடுதல் இழப்பீடு வழங்க பரிந்துரை

மதுரை:  சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு, விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ஐகோர்ட் கிளை உறுதி செய்தது.  விருதுநகர் மாவட்டம், மம்சாபுரம் காவல் நிலையத்திற்குட்பட்ட, 4ம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமியின் பெற்றோர் கடந்த 8.10.2006ல்  வேலைக்கு ெசன்று விட்டனர். தோழிகளுடன் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சிறுமியின் உறவினரான பாதமுத்து(35), சிறுமியை வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். இதை சிறுமி உறவினரிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் மம்சாபுரம் போலீசில் புகார் அளித்தனர். போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிந்த ேபாலீசார் பாதமுத்துவை கைது செய்தனர். இந்த வழக்ைத விசாரித்த விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம், கடந்த 17.12.2015ல் பாதமுத்துவுக்கு ஆயுள் தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து பாதமுத்து, ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்தார்.

Advertising
Advertising

இந்த மனுவை நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவு:  மனுதாரர் மீதான குற்றச்சாட்டிற்கு போதுமான ஆவண, ஆதாரங்களின் அடிப்படையிலேயே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனவே, அப்பீல் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆயுள் தண்டனை விதித்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. மனுதாரரின் ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது. அவரை உடனடியாக போலீசார் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். 9 வயது சிறுமி பாலியல் கொடூரத்தில் பாதித்துள்ளார். அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டியது அவசியம். எனவே, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு முறையானதும், அதிகப்படியானதுமான இழப்பீடு வழங்க இந்த நீதிமன்றம் பரிந்துரைக்கிறது. இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: