மேற்கு வங்கம், பீகார் உட்பட 4 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்: ஜனாதிபதி அறிவிப்பு

புதுடெல்லி: மேற்கு வங்கம், பீகார் உட்பட 4 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமிக்கப்பட்டுள்ளனர்..அதன்படி, மேற்கு வங்க மாநிலத்தின் புதிய ஆளுநராக முன்னாள் எம்பி.யும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான ஜகதீப் தாங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், கடந்த 1990-91ம் ஆண்டில் நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சராக இருந்தவர். கடந்த, 2003ம் ஆண்டு காங்கிரசில் இருந்து விலகி பாஜ.வில் இணைந்தார். கடந்த 2018 ஜனவரி முதல் மபி. ஆளுநராக பதவி வகித்து வந்த ஆனந்திபென் படேல், உத்தர பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பீகார் ஆளுநராக உள்ள லால்ஜி டாண்டன், மத்திய பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். பீகாருக்கு பாகு சவுகான் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திரிபுரா ஆளுநராக இருந்த கப்டான் சிங் சோலங்கியின் பதவிக் காலம் வரும் 27ம் தேதியுடன் முடிவதால், இம்மாநிலத்தின் புதிய ஆளுநராக சட்டீஸ்கர் பாஜ மூத்த  தலைவர் ரமேஷ் பைஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  மத்திய அரசு - நாகலாந்து தேசிய சோசலிஷ்ட் அமைப்பினர் இடையே சமரச ஒப்பந்தம் ஏற்பட அரசுக்கு பெரிதும் உதவிய ஓய்வு பெற்ற நுண்ணறிவு பிரிவு சிறப்பு இயக்குனர் என்.ரவி, நாகலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளார்.  இவர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு மிகவும் நெருக்கமானவர்.

Related Stories: