பலாத்காரம் செய்து வடமாநில சிறுமி எரித்துக்கொலை: சித்தூர் அருகே பயங்கரம்

திருமலை: உ.பி.யைச் சேர்ந்தவர் ஸ்ரீசந்திரா. பானிபூரி வியாபாரி. இவர் சித்தூர் அருகே தொட்டம்பேடு கிராம பஞ்சாயத்து சாலையில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன தனது மகன் ரிங்கு (18), மகள் பிங்கியை (16)உறவினர்களிடம் விட்டு, மனைவியுடன் ஊர் சென்றிருந்தார்.  இந்நிலையில் கடந்த 18ம் தேதி வெளியே சென்ற ரிங்கு திரும்பி வரவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள மகாலட்சுமி கோயில் பின்புறம் உள்ள குப்பை மேட்டில், பிங்கி கருகிய நிலையில் சடலமாக கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். விசாரணையில் சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றிருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Advertising
Advertising

Related Stories: