ஸ்கிம்மர் கருவி பொருத்தி ஏடிஎம்மில் கொள்ளை: பல்கேரிய நாட்டினர் 3 பேர் கைது

துரைப்பாக்கம்: ஒக்கியம் துரைப்பாக்கம் ராஜீவ்காந்தி சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் பல்கேரிய நாட்டை சேர்ந்த நெக்கோலி (31), போரீஸ் (29), லூயிதேநீர் (29) ஆகிய 3 பேர் தங்கியிருந்தனர். நேற்று முன்தினம் அவர்கள் தங்கியிருந்த அறையை ஓட்டல் ஊழியர் ஒருவர் சுத்தம் செய்ய சென்றார். அப்போது, அந்த அறையில் ஏராளமான ஏடிஎம் கார்டுகள் இருப்பது தெரிந்தது.  சந்தேகமடைந்த அந்த ஊழியர், ஓட்டல் நிர்வாகத்திடம் இதுபற்றி தெரிவித்துள்ளார். உடனடியாக ஓட்டல் மேலாளர் இதுபற்றி கண்ணகி நகர் காவல் நிலையத்தில் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த அறையை சோதனை செய்தனர்.

அங்கு, 40க்கும் மேற்பட்ட போலி ஏடிஎம் கார்டுகள் மற்றும் ஏடிஎம் மெஷின்களில் பொருத்தக்கூடிய ஸ்கிம்மர் கருவி இருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், அந்த அறையில் இருந்த 7.5 லட்சம் இந்திய ரூபாய், 10 ஆயிரம் மதிப்புள்ள டாலர், ஒரு லேப்டாப், 5 செல்போன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.  பின்னர், அந்த 3 பேரையும் கைது செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். கைதான மூன்று வாலிபர்களும் எந்ெதந்த பகுதிகளில் ஏடிஎம் மெஷின்களில் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி கொள்ளையடித்தனர், என மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>