தங்கசாலையில் 400 ஆண்டுகள் பழமையான முருகன் கோயிலை புனரமைக்க வேண்டும்: சேகர்பாபு எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவையில் துறைமுகம் பி.கே.சேகர்பாபு (திமுக) கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: சென்னை தங்கசாலையில் அமைந்திருக்கின்ற முருகன் கோயில் 400 ஆண்டுகள் பழமையானது. இந்த கோயிலில் மலைபோல் கோபுரம் அமைந்திருக்கும். படிகலிங்கம் அந்த கோயிலில் மட்டும்தான் அமைந்திருக்கிறது. கோயிலின் பின்னால் இருந்து தீபாராதனை காட்டினால், முன்னால் ஜொலிக்கும். அத்தகைய அந்த கோயில் இன்றைக்கு பயன்பாடு இல்லாமல், உடைந்து போய் இருக்கிறது. எனவே அந்த கோயிலை புனரமைத்து, தெய்வ வழிபாட்டிற்கு வழி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதற்கிடையே தமிழ்நாடு நகராட்சிகள் சட்ட திருத்த மசோதா சட்டசபையில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த நேரத்தில் திமுக எம்எல்ஏ பி.கே.சேகர்பாபு பேசும் போது, “ நகராட்சிகள் சட்ட திருத்த மசோதாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் சட்டத்தில் 21 அங்கம் குறைபாடு உள்ளவர்களை மாற்றுத்திறனாளிகளாக சேர்க்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆகவே அதையும் சேர்த்தால், மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதற்கான மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தது 5 சதவீத இட ஒதுக்கீடாவது தந்தால்தான், அவர்களுடைய உரிமைகள், போராட்ட தலங்கள் முழுமையாக நிறைவேறும். மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் ஒளி பிறக்கும். இந்த சட்ட திருத்தத்தோடு சேர்த்து வெகு விரைவில் நடைபெற இருக்கிற உள்ளாட்சி தேர்தலில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்குகின்ற சட்ட முன்வடிவையும் கொண்டு வர வேண்டும்” என்றார்.

Related Stories: