தமிழக பொதுப்பணித்துறையில் 25 கண்காணிப்பு பொறியாளர்கள் பணியிடமாற்றம்: அரசு உத்தரவு

சென்னை: தமிழக பொதுப்பணித் துறையில் 25 கண்காணிப்பு பொறியாளர்கள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 23 பேர் கண்காணிப்பு பொறியாளர்களை பதவி உயர்வு வழங்கி, பணியிட மாற்றம் செய்தும், 2 கண்காணிப்பு பொறியாளர்களை பணியிடமாற்றம் செய்து அரசு செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னை மண்டல கட்டுமான பிரிவு துணை தலைமை பொறியாளர் சத்திய மூர்த்தி கட்டுமான பிரிவில் இணை தலைமை பொறியாளராகவும், சென்னை மண்டல கட்டுமான பிரிவு செயற்பொறியாளர் ஆயிரத்தரசு ராஜசேகரன், சென்னை மண்டல கட்டுமான பிரிவு கண்காணிப்பு பொறியாளராகவும், தாமிரபரணி கோட்ட வடிநில செயற்பொறியாளர் சண்முகவேல் சென்னை மண்டல அணைகள் பாதுகாப்பு இயக்க இணை தலைமை பொறியாளராகவும், தர்மபுரி கோட்ட கட்டுமான பிரிவு செயற்பொறியாளர் ராமசாமி சென்னை மண்டல நிலத்தடி நீர் இணை தலைமை பொறியாளராகவும்,

மணிமுத்தாறு கோட்டவடி நில செயற்பொறியாளர் ராஜேந்திரன் சென்னை, அணை பாதுகாப்பு திட்ட இயக்குநராகவும், நீர்வளத்துறை மாநில திட்ட மேலாண்மை பிரிவு செயற்பொறியாளர் காளிமுத்து நீர்வளத்துறை மாநில திட்ட மேலாண்மை பிரிவு இயக்குநராகவும், பொள்ளாச்சி கோட்ட தரகட்டுப்பாட்டு பிரிவு செயற்பொறியாளர், விசாலாட்சி சென்னை மண்டல நீர்வளத்துறை வடிவமைப்பு ஆராய்ச்சி மற்றும் கட்டுமான ஆதாரம், சென்னை, தொழில்நுட்ப கல்வி இயக்கக கோட்ட செயற்பொறியாளர் பாண்டியராஜன் சென்னை மண்டல மருத்துவ கட்டுமான பிரிவு கண்காணிப்பு பொறியாளராகவும், சென்னை, தென்மாநில கோட்ட செயற்பொறியாளர் ரமணி, சிட்கோ கண்காணிப்பு பொறியாளர் உட்பட 23 பேர் பதவி உயர்வு வழங்கி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் சென்னை மண்டல மருத்துவ கட்டுமான பிரிவு கண்காணிப்பு பொறியாளர் ஞானமூர்த்தி வேலூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு கண்காணிப்பு பொறியாளராகவும், சென்னை மண்டல கட்டுமான மற்றும் பராமரிப்பு பிரிவு சிறப்பு தலைமை பொறியாளர் பி.பி.கணேசன் பூண்டி நீராய்வு இயக்குநராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: