ஆட்டோமொபைல்: ரூ.6 லட்சத்தில் புதிய 7 சீட்டர் கார்

ரெனோ நிறுவனத்தின் டிரைபர் எம்பிவி ரக கார் 4 மீட்டருக்குள் உருவாக்கப்பட்டுள்ள 7 சீட்டர் மாடலாக வர இருக்கிறது. கச்சிதமான தோற்றம், கவரும் டிசைன் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுடன் மிக குறைவான பட்ஜெட்டில் வருவதால் இந்த கார் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இப்புதிய ரெனோ டிரைபர் கார் அடுத்த மாதம் அல்லது வரும் பண்டிகை காலத்திற்குள் எப்படியும் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார், ரெனோ-நிஸான் கூட்டணியின் சிஎம்எப்-ஏ பிளஸ் என்ற பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பெரும் வரவேற்பை பெற்ற கிவிட் காரின் டிசைன் அம்சங்களுடன் இந்த கார் வருகிறது. எல்இடி பகல்நேர விளக்கு, ரூப் ரயில், பாடி கிளாடிங் சட்டங்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் எடுப்பாக காட்டுகிறது.

டட்சன் கோ பிளஸ் காருக்கு அடுத்ததாக 4 மீட்டருக்குள் வர இருக்கும் 7 சீட்டர் மாடல் இதுதான் என்பது, இதன் மிகப்பெரிய பலம். மேலும், இதன் மூன்றாவது வரிசை இருக்கைகளை எளிதாக கழற்றி மாட்ட முடியும். மூன்றாவது வரிசை இருக்கைகளை நீக்கினால் 625 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதியையும் பெற முடியும். அதாவது, 4 மீட்டர் நீளத்திலான கார்களில் அதிக பூட்ரூம் இடவசதி கொண்ட மாடலாகவும் இது இருக்கும். இந்த காரில் 8 அங்குல தொடுதிரையுடன்கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகள் உள்ளன. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும் இதன் முக்கிய அம்சமாக உள்ளது.

இப்புதிய காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 71 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்விலும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்புதிய கார், ரூ.4.5 லட்சம் என்ற மிக சவாலான ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து வசதிகளும் பொருந்திய டாப் வேரியண்ட் ரூ.6 லட்சத்திற்குள் இருக்கும் எனக்கூறப்படுகிறது. அதனால், இந்த கார் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Tags : Automobile, Rs. 6 Lakhs, New 7 Seater, Car
× RELATED பொங்கல் விடுமுறையையொட்டி கோவை...