அதிக சக்தியுடன் டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1260 என்டியூரோ பைக்

டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1260 அட்வென்ச்சர் டூரர் பைக்கின் ஆப்ரோடு வெர்ஷனாக மல்டிஸ்ட்ரேடா 1260 என்டியூரோ பைக் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பைக் முழுவதுமாக கட்டமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது. முந்தைய மாடலைவிட ஏராளமான கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்த பைக் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் 1,262 சிசி எல்-ட்வின் இன்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் 3,500 ஆர்பிஎம் என்ற இன்ஜின் சுழல் வேகத்திலேயே 85 சதவீத டார்க்கை வழங்கும் திறன் கொண்டது.

Advertising
Advertising

இந்த பைக்கில், முன்புறத்தில் டுகாட்டி ஸ்கைஹூக் போர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. ஹேண்டில்பார் மற்றும் புட் பெக்குகளின் வடிவமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்புறத்தில் பிரெம்போ எம்4.32 ரேடியல் காலிபர்கள் கொண்ட 320 மிமீ டியூவல் டிஸ்க் கொண்ட பிரேக்கும், பின்புறத்தில் சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் உள்ளன. இந்த பைக்கில், சாம்பல் வண்ணத்திற்கு பதிலாக புதிய மணல் வண்ண கலவையும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

மேலும், சிவப்பு வண்ணத்தைவிட இந்த விசேஷ வண்ணத்திற்கு ரூ.24,000 கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பாஷ் இனர்ஷியல் மெசர்மென்ட் சிஸ்டம், கார்னரிங் ஏபிஎஸ், டுகாட்டி வீலி கன்ட்ரோல், நான்குவிதமான ரைடிங் மோடுகள் ஆகியவை இதன் முக்கிய தொழில்நுட்ப அம்சங்களாக உள்ளன. இந்த பைக் ரூ.19.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. டிரையம்ப் டைகர் 1200 எக்ஸ்.சி.எக்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஜிஎஸ் அட்வென்ச்சர் பைக் மாடல்களுக்கு இது போட்டியாக இருக்கும்.

Related Stories: