யமஹா அதிரடி... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்...!

பொதுவாக இந்தியாவில் இயங்கிவரும் அனைத்து நிறுவனங்களும் ஆடி மாதம் தொடங்குது என்றாலே, ‘’ஆடி தள்ளுபடி’’ என்ற பெயரில் பல்வேறு சலுகைகளையும், சிறப்பு தள்ளுபடிகளையும் வழங்குவது வழக்கம். ஆனால், இதற்கு விதி விலக்காக ஜப்பான் நாட்டு நிறுவனமான யமஹா வழக்கத்திற்கு மாறான ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில், அதன் பிரபல மாடல்களான ஆர்15 மற்றும் எப்இசட் வரிசையில் உள்ள பைக்குகளின் விலையை உயர்த்தி அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இப்புதிய அறிவிப்பால், ரூ.600 முதல் 1,200 ரூபாய் வரையிலான விலை உயர்வை அந்த பைக்குகள் பெற்றுள்ளன.

விலை உயர்வுக்கு பிறகு யமஹா ஆர்15வி3 மாடல் ரூ.1,40,280 என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. முன்னதாக இந்த பைக் ரூ.1,39,680 என்ற விலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று, யமஹா ஆர்15வி3 மாடலில் கிடைக்கும் டார்க்நைட் எடிசனும் விலை உயர்வை பெற்றுள்ளது. அந்தவகையில், முந்தைய விலையான ரூ.1,41,680 என்பதை மாற்றி ரூ.1,42,280 என்ற விலையை பெற்றுள்ளது. அதேபோன்று, யமஹா எப்இசட்25 மாடலும் ரூ1,34,180 என்ற புதிய விலையை பெற்றிருக்கிறது. இதற்கு முன்பு இந்த பைக் ரூ.1.33 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வந்தது.

இதேபோன்று, எப்இசட் வரிசையில் விற்பனையில் இருக்கும் மற்ற மாடல் பைக்குகளும் விலை உயர்வை பெற்றுள்ளன. அந்தவகையில், பேஸர்-25 ஸ்போர்ட் டூரர் பைக் ரூ.1.43 லட்சத்தில் இருந்து ரூ.1,44,180 என்ற விலையையும், எப்இசட்-எப்ஐ மாடல் பைக் ரூ.96,180-ல் இருந்து ரூ.98,180 என்ற விலையையும், எப்இசட்எஸ்-எப்ஐ பைக் ரூ.95 ஆயிரத்தில் இருந்து ரூ.97 ஆயிரம் வரையும் விலை உயர்வை பெற்றுள்ளன. இந்த விலை உயர்வை பெற்றுள்ள மாடல்களிலேயே யமஹா ஒய்இசட்எப்ஆர்15 வி3.0 மாடல் பைக்தான் அதிகம் விற்பனையாகும் பைக்காக இருக்கிறது.

அதேசமயம், இது மூன்றாம் தலைமுறை பைக்காகும். அவ்வாறு, மூன்றாம் தலைமுறை பைக்காக வெளிவந்த ஒய்இசட்எப்ஆர்15 வி3.0 பைக்கை பிரிமியம் லுக்கில் காட்சிப்படுத்தும் வகையில், அதன் எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் உள்ளிட்டவை மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன் இன்ஜினும் கணிசமான அப்டேட் பெற்றுள்ளது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது.

× RELATED புதிய உச்சத்தை தொட்டது தங்கத்தின்...