மின்னொளி கபடி போட்டி: சேர்வைகாரன்பட்டி ஏ அணி முதலிடம்

கடையம்: கடையம் அருகே ஆலடி அருணா கிராமபுற விளையாட்டு பயிற்சி மையம் சார்பில் கலைஞர் 96 வது பிறந்த நாளை முன்னிட்டு மின்னொளி கபாடி போட்டி நடைபெற்றது. சேர்வைகாரன்பட்டி டிஎம்சி விளையாட்டு மைதானத்தில் நடந்த இந்த மின்னொளி கபாடி போட்டிக்கு மாவட்ட முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் சேர்மசெல்வன் தலைமை வகித்தார். கடையம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் தங்கராஜா முன்னிலை வகித்தார்.  ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை வாழ்த்துரை வழங்கி போட்டியை தொடங்கி வைத்து பரிசு வழங்கினார்.  போட்டியில் பல்வேறு பகுதிகளிலிருந்த 77 அணிகள் மோதின. இதில் சேர்வைகாரன்பட்டி ஏ அணி முதலிடம் பிடித்து ரூ 20 ஆயிரம் பணம் மற்றும் கோப்பையை வென்றது. ஆலடிபட்டி அணி 2ம் இடம் பிடித்து ரூ 15 ஆயிரம் பணம் மற்றும் கோப்பையை வென்றது.

Advertising
Advertising

கட்டேறிபட்டி அணி 3ம் இடம் பிடித்து ரூ 10 ஆயிரம் மற்றும் கோப்பை, சேர்வைகாரன்பட்டி பி அணி 4ம் இடம் பிடித்து ரூ 10 ஆயிரம் மற்றும் கோப்பையை வென்றன. இதில் மாவட்ட மகளிரணி ராஜாத்தி, மாவட்ட மகளிரணி தொண்டரணி மல்லிகா, ஆழ்வார்குறிச்சி  துணை செயலாளர்கள் அம்பேத்குமார் ரவி, சகுந்தலா, ஊராட்சி செயலர்கள் ஜம்பு, விக்டர் சேவியர் துரைசிங், ஆர்எஸ் பாண்டியன், கோதர்ஷா , நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அலெக்சாண்டர் தங்கம் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: