தரமற்ற பொருட்களால் குடிநீர் தொட்டி அமைப்பு?.. பொதுமக்கள் புகார்

செம்பட்டி: நிலக்கோட்டையில் தரமற்ற கட்டுமான பொருட்களால் குடிநீர் தொட்டி கட்டப்படுவதாக பொது மக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்டது கோட்டை. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இப்பகுதியில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சேமிக்கும் தரைநிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டு வருகிறது. அருகில் உள்ள அணைப்பட்டியில் இருந்து கொண்டு வரப்படும் நீரை சேமித்து, நிலக்கோட்டை பேரூராட்சியின் அனைத்துப் பகுதிகளுக்கும் விநியோகிக்க இந்த தொட்டி கட்டப்படுகிறது.

இந்நிலையில் இந்த குடிநீர் தொட்டி கட்டுமானத்திற்கு தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக பொது மக்கள் மத்தியில் புகார்கள் எழுந்துள்ளன. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டும், காணாமல் உள்ளதாகவும் பொது மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: