அருப்புக்கோட்டை அருகே ஊரணி தூர் வாரும் பணி துவக்கம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே ஊரணி தூர் வாரும் பணி துவங்கியுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை-திருச்சுழி ரோட்டில் நகராட்சி குடிநீர் மேல்நிலைத்தொட்டி எதிரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஊரணி உள்ளது. இந்த ஊரணி ஒரு ஏக்கர் 88 சென்ட் பரப்பளவு கொண்டது. ஊரணியில் இறைச்சி கழிவு, குப்பைகளும் கொட்டப்பட்டன. இதனால் ஊரணி குப்பைமேடாகி துர்நாற்றம் வீசியது. வரத்துக்கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் சிக்கின. ஊரணியை தூர்வாரி பலமுறை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. நீர்நிலைகளை சமூக ஆர்வலர்கள் முயற்சியில் பாதுகாக்கலாம் என்ற அரசு உத்தரவிட்டதையடுத்து அருப்புக்கோட்டை காமராஜர் நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராம்பாண்டியன்,

திருச்சுழி ரோட்டிலுள்ள பிறமடை ஊரணியை தூர்வார அனுமதி கோரி ஆர்டிஓ செல்லப்பாவிடம் மனு கொடுத்தார். ஆர்டிஓ அனுமதி வழங்கியதை தொடர்ந்து ஊரணி தூர்வாரும் பணி துவங்கியது. நிகழ்ச்சியில் ஆர்டிஓ நேர்முக உதவியாளர் ராமச்சந்திரன், மீனாட்சி சொக்கநாதர் கோயில் நிர்வாக அதிகாரி மகேந்திர பூபதி, ஜெயவிலாஸ் தொழில் அதிபர் கார்த்திகேயன், சமூக ஆர்வலர் ராம்பாண்டியன், பாஜ நிர்வாகி வெற்றிவேல், அதிமுக நகர செயலாளர் கண்ணன், பம்பாய் மணி என்ற வீரசுப்பிரமணி, பொன்ராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: