திங்கள்நகர் அருகே மரம் விழுந்து மின்தடை

திங்கள்சந்தை: குமரி மாவட்டத்தில் சாரல் மழையுடன் சூறைக்காற்றும் வீசி வருகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுவது, மின்கம்பங்கள் சாய்வது, கூரைகள் காற்றில் பறப்பது என பல தொல்லைகளை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர். மேலும் இந்த சூறைக்காற்று பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.இந்த நிலையில் வில்லுக்குறி சந்திப்பில் இருந்து மாடத்தட்டுவிளை செல்லும் சாலையில் பள்ளி வளாகத்தில் நின்ற தேக்குமரத்தின் பெரிய கிளை ஒன்று திடீரென முறிந்து விழுந்தது. இந்த மரக்கிளை அருகில் நின்ற மின்கம்பம் மீது விழுந்ததால் அதன் அடிப்பகுதி துண்டானது. மரக்கிளை சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். தகவல் அறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து புதிதாக மின்கம்பம் அமைத்து மின் இணைப்பை சரிசெய்தனர்.

Related Stories: