அடுத்த இரண்டு மாதங்கள் ராணுவத்தில் தனது நேரத்தைச் செலவிட தோணி திட்டம்: மே.இ.தீவுகள் தொடரிலிருந்து விலகல்

மும்பை: மே.இ.தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியின் கிரிக்கெட் நட்சத்திரம் எம். எஸ்.தோணி இடம்பெற மாட்டார் என்று தகவல் தெரிவிக்கின்றன. மே.இ.தீவுகளில் 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி கலந்துகொள்கிறது. இதற்கான அணி வரும் ஞாயிறு அன்று தேர்வு செய்யப்படுகிறது. இதனையடுத்து தோனி அணியில் சேர்க்கப்படுவாரா என்பது பற்றி கேள்விகள் எழுந்து வருகின்றன. இது தொடர்பாக முன்னாள் வீரர்கள் சேவாக், கம்பீர் ஆகியோரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertising
Advertising

இந்நிலையில் தோனி  மேற்கிந்தியத் தொடரில் தனது பெயரை பரிசீலனைக்கு எடுத்து கொள்ள வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டதாகவும், அடுத்த இரண்டு மாதங்கள் ராணுவத்தில் தனது நேரத்தைச் செலவிட இருக்கிறார் என்றும் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய ராணுவத்தில் தோணி கவுரவ லெஃப்டினென்ட் கர்னலாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தோனி இடம்பெறாத பட்சத்தில் இந்திய அணியில் ரிஷப் பந்த் இடம்பெறுவார் என்று கூறப்படுகிறது.

Related Stories: