மும்பையில் மின்சார ரயில் விபத்துகளில் ஒரே நாளில் 15 பேர் உயிரிழப்பு

மும்பை : மும்பையில் மின்சார ரயில் விபத்துகளில் ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். தினந்தோறும் மும்பையில் 75.லட்சம் பேர் மின்சார ரயில்களை  பயன்படுத்தி வருகின்றனர். எப்போதும் பொங்கிவழியும் மக்கள் கூட்டத்துடன் செல்லும் மும்பை மின்சார ரயில்களில் தொற்றிக்கொண்டு பலர் பயணிக்கின்றனர். இதில் சிலர் ஓடும் ரயிலில் இருந்து விழுந்தும் தண்டவாளத்தை குறுக்கே கடந்து செல்ல முயன்றும் ரயிலில் அடிபட்டு பலியாவது வழக்கம்.

Advertising
Advertising

சிலர் செல்பி மோகத்தால் ரயில் வருவதை கவனிக்காமல் மொபைலில் மூழ்கி உயிரிழக்கின்றனர். அதிகபட்சமாக 10பேர் பலியானதாக கூறப்படும் நிலையில் நேற்று ஒரே நாளில் பல்வேறு பகுதிகளில் மின்சார ரயில்களின்  விபத்துகளில் 15பேர் உயிரிழந்தனர். மேலும் 13பேர் படுகாயம் அடைந்துள்ளனர்

Related Stories: