கரூரில் ராகிங் செய்த 3ஆம் ஆண்டு மாணவர்கள் கைது

கரூர்: கரூரில் 2ஆம் ஆண்டு மாணவனை ராகிங் செய்த 3ஆம் ஆண்டு மாணவர்களை காவலதுறையினர் கைது செய்துள்ளனர். தான்தோன்றிமலையில் இயங்கிவரும் அரசுக்கலை கல்லூரியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கைதான 3ஆம் ஆண்டு மாணவர்கள் பாஸ்டர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் ராக்கிங்கிற்கு ஆளான 2ஆம் ஆண்டு மாணவன் விக்னேஷ் தற்கொலைக்கு முயன்றதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து ராக்கிங்கில் ஈடுபட்ட 3ஆம் ஆண்டு மாணவர்களான சிவசக்தி மற்றும் நந்தகுமாரை கைது செய்த போலீசார், மாவட்ட  அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி அரியலூர் பாஸ்டர் சிறையில் அடைத்தனர்

Related Stories: