நடந்தாய் வாழி காவிரி திட்டம்... மாற்று திறனாளிகளுக்கு படி அதிகரிப்பு... 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு

சென்னை: நீர் வளத்தை மேம்படுத்த நடந்தாய் வாழி காவிரி திட்டம் தொடங்கப்படும் என்று முதலமைச்சம் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். மேலும் கழிவுநீரை குடிநீராக்க அரசு கொள்கை முடிவு எடுக்க உள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்துக்காக மத்திய அரசுடன் மாநில அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். நீர் மேலாண்மையை மேம்படுத்த மாவட்டங்கள் வாரியாக ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். மழை நீரை சேகரிக்க விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம்

தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் திருவுருவச் சிலையுடன் மணிமண்டபம் அமைக்கப்படும் முதல்வர் அறிவித்துள்ளார். ரூ.50 லட்சம் செலவில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ரேஷன் ஊழியர்களுக்கு குடும்ப நல நிதி உயர்வு

ரேஷன் கடை ஊழியர்களின் குடும்ப நல நிதி ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மாற்று திறனாளிகளுக்கு படி அதிகரிப்பு

கூட்டுறவுத்துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான படி ரூ.1,000-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தி 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அஸ்ஸாம் மொழியில் திருக்குறள் மொழி பெயர்ப்பு

இந்த ஆண்டு அஸ்ஸாம் மொழியில் திருக்குறள் மொழி பெயர்ப்பு செய்யப்படும் என்று 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

நவம்பர் 1 - தமிழ்நாடு நாள்

நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழ் பல்கலை கழகத்தில் கால்டுவெல் பெயரில் தமிழ் இருக்கை உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: