அமித் ஷா உத்தரவு பாஜ தேர்தல் பொறுப்பாளர் ராதாமோகன்

புதுடெல்லி: பாஜ கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி நிறைவடைந்த பிறகு, அடுத்த மாதம் முதல் கட்சியின் அமைப்பு தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தல் 5 முதல் 6 மாதங்கள் நடைபெறும் என ெதரிகிறது. இந்த நிலையில், உள்கட்சி தேர்தலை நடத்துவதற்கான குழுவை மேற்பார்வையிடும் பொறுப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ராதாமோகன் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான உத்தரவை கட்சியின் தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா நேற்று பிறப்பித்தார். ராதாமோகன் சிங் தற்போது எம்பி.யாக உள்ளார். இவருக்கு தேர்தலில் உதவிட வினோத் சோங்கர் எம்பி, முன்னாள் எம்பி ஹன்ஸ்ராஜ் அகிர் மற்றும் கர்நாடக எம்எல்ஏ சி.டி.ரவி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: