×

சமூக போராளிகள் மீது காவல்துறை கடுமை காட்டுவது ஏன்? திமுக எம்எல்ஏ ஐ.பெரியசாமி கேள்வி

சென்னை:   சட்டப் பேரவையில் நேற்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ஆத்தூர் ஐ.பெரியசாமி (திமுக) பேசியதாவது:  திமுக ஆட்சி காலத்தில் கலைஞர் ஒவ்வொரு முறையும் முதல்வராக இருந்த போது குழு அமை த்து காவலர் நலன்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றி தந்தார். ஆனால் இன்றைய ஆட்சியில் கூடுதல் நேரம் வேலை பார்ப்பவர்களுக்கு வெறும் ரூ.200 மட்டுமே வழங்குகிறது. வாரத்தில் ஒரு நாள் அவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும், ஐபிஎஸ் முடித்து வருபவர்களுக்கு பதவி உயர்வு வேகமாக கிடைக்கிறது. ஆனால் குரூப் 1 முடித்து காவல் துறையில் சேருபவர்களுக்கு பதவி உயர்வு சுணக்கம் ஏற்படுகிறது. . முதல்வர் எடப்பாடி பழனிசாமி: 1980ம் ஆண்டு தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் தொடங்கப்பட்டது. பின்னர் திமுக ஆட்சியில் 1989ல் அது நிறுத்தப்பட்டது. பின்பு 1991ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மீண்டும் தொடங்கப்பட்டது. அதேபோன்று சிலை கடத்தல் பிரிவு 1983ம் ஆண்டு துவங்கப்பட்டது.

காவலர்களுக்கு சொந்த இல்லம்  திட்டத்தை மேலும் 10 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டு இருக்கிறது. காவலர்களுக்கு பணிச்சுமை காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தை போக்க உளவியல் ரீதியான பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டுள்ளது.   
ஐ.பெரியசாமி: மது விலக்கிற்காக போராடும் சமூக போராளிகள், பொதுமக்கள் நன்மைக்காக போராடும் சமூக ஆர்வலர்கள் மீது காவல்துறை கடுமை காட்டுகிறது. ஜனநாயக நாட்டில் போராடும் உரிமை உள்ளது. வக்கீல் நந்தினி மதுவுக்கு எதிராக போராடி வருகிறார். அவருக்கு திருமண தேதி முடிவு செய்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்று சிறையில் அடைத்தது மனிதாபிமானமற்ற செயல். காவல் துறையின் செயல் வருத்தத்தை தருகிறது.  அமைச்சர் சி.வி.சண்முகம்: திருமணத்தை காவல் துறை நிறுத்தியதாக கூறுவது தவறு. நீதிமன்ற உத்தரவுபடிதான் கைது செய்யப்பட்டார். காவல் துறைக்கு சம்பந்தமில்லை.


Tags : Social Fighters, Police, DMK MLA I.Beriyasamy
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...