மணல் திருட்டு வழக்கில் கேரள தலைமறைவு குற்றவாளி 6 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்

சென்னை: கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் வித்யா நகரை சேர்ந்தவர் சஜீத் (41). இவர், 2013ல் கேரளாவில் உள்ள நீர்நிலையில் சட்டவிரோதமாக மணல் திருடியுள்ளார். கேரள கனிமவளத்துறை இவரை பிடித்து ரூ.5000 அபராதம் விதித்தது. ஆனால் சஜீத், பணத்தை கட்டவில்லை. இதுகுறித்து கேரள கனிம வளத்துறை அதிகாரிகள், வித்யா நகர் போலீஸ்  நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் சஜீத் தலைமறைவானது தெரியவந்தது.இதையடுத்து சஜீத்தை தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என அறிவித்தனர்.  நேற்று முன்தினம் மாலை 3.15 மணிக்கு இலங்கையிலிருந்து லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் தீவிரமாக  சோதனை நடத்தினர். அப்போது அந்த விமானத்தில் கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து இலங்கை வழியாக சென்னைக்கு சஜீத் வந்தார். அவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்தபோது கடந்த 6 ஆண்டுகளாக தலைமறைவான உள்ள குற்றவாளி என்பது தெரியவந்தது. உடனடியாக சஜீத்தை கைது செய்து கேரளாவுக்கு கொண்டு சென்றனர்.

Related Stories: