விளையாட்டு துளிகள்

* வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின்போது இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தங்களின் மனைவி, தோழியரை உடன் அழைத்துச் செல்வதற்கான பயண திட்டத்தை கேப்டன் விராத் கோஹ்லி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முடிவு செய்யலாம் என பிசிசிசி நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.

* ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் அரசியல் தலையீடு இருப்பதால் அந்த நாட்டு அணி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.
Advertising
Advertising

* நியூசிலாந்தின் சிறந்த குடிமகன் விருதுக்கு கேன் வில்லியம்சன், பென் ஸ்டோக்ஸ் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. உலக கோப்பை பைனலில் நியூசிலாந்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்த இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்தில் பிறந்தவர். இவர் தனது 12வது வயதில் இங்கிலாந்தில் குடியேறி பின்னர் அங்கேயே தங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

* கிரிக்கெட் போட்டிகளில் ஒரு வீரர் காயம் காரணமாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டால், அவருக்கு பதிலாக மாற்று வீரர் பேட்டிங், பந்துவீச்சில் ஈடுபட ஐசிசி அனுமதி அளித்துள்ளது.

Related Stories: