1600 கோடி முறைகேடு வழக்கு ஐஎம்ஏ அதிபர் டெல்லியில் கைது

பெங்களூரு: பெங்களூருவில் நடந்த ரூ.1,600 கோடி ஐ.எம்.ஏ. மோசடி வழக்கில் தொடர்புடைய  உரிமையாளர் மன்சூர்கானை அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லியில் கைது  செய்தனர். பெங்களூரு சிவாஜிநகர் பகுதியில் அமைந்துள்ள ஐ.எம்.ஏ.  நகைக்கடை மற்றும் நிதி நிறுவனத்தின் உரிமையாளர் மன்சூர்கான். இவர் வாடிக்கையாளர்களிடம் கவர்ச்சி திட்டங்களை கூறி ரூ.1,600 கோடிக்கு மேல் முதலீடு பெற்றார். ஆரம்பத்தில் இதற்கு சரியான லாபத்தை கொடுத்து வந்த அவர், பின்னர் இழுத்தடிக்க தொடங்கினார். பின்னர், தனது நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகினார். இதனால், பணம் முதலீடு செய்த 42 ஆயிரம் மோசடி செய்யப்பட்டனர். இது பற்றி கர்நாடக அரசு சார்பில் எஸ்.ஐ.டி போலீசாரும், மத்திய அரசு  சார்பில் அமலாக்கத் துறையும் விசாரணை இறங்கின. அதில், அரசு அதிகாரிகள், போலீஸ் உள்பட 17 பேர் கைது  செய்யப்பட்டனர்.

மேலும், பல கோடி மதிப்பிலான சொத்துகளும் பறிமுதல்  செய்யப்பட்டன.இந்நிலையில், வெளிநாடு தப்பிச் சென்ற மன்சூர்கானை விரைவில் இந்தியா வருவதாக சில தினங்களுக்கு முன் வீடியோ வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். இதனால் உஷார் அடைந்த அமலாக்கத் துறை அதிகாரிகளும், கர்நாடகா போலீசாரும் விமான நிலையங்களை கண்காணித்தனர். நேற்று டெல்லி விமான நிலையம்  வந்த அவரை அமலாக்க அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: