எழும்பூர் தொகுதியில் பழுதடைந்த குடியிருப்புகளை இடித்து விட்டு புதிய குடியிருப்பு கட்ட வேண்டும்: திமுக எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவையில் எழும்பூர் கே.எஸ்.ரவிச்சந்திரன் (திமுக) பேசியதாவது: எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 77வது வார்டு கே.பி.பூங்கா குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 1 முதல் 14 பிளாக் வரை 672 குடியிருப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள போதுமான நிதியை ஒதுக்கி, கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். இதே வார்டில் 864 கட்டி முடிக்கப்பட்ட புதிய குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை பயனாளிகளுக்கு விரைவில் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 77வது வார்டில் உள்ள பி.கே.காலனி 594 குடிசை மாற்று வாரியத்தின் பழுதடைந்த குடியிருப்புகளை இடித்து விட்டு புதிய  குடியிருப்பு கட்ட வேண்டும்.  61வது வார்டில் உள்ள டாக்டர் சந்ேதாஷ் நகர் குடிசை மாற்று வாரியத்தில் பழுதடைந்துள்ள 272 குடியிருப்புகளை இடித்து விட்டு புதிய குடியிருப்புகள் கட்ட வேண்டும். மேலும் அதனை சுற்றியுள்ள 300 குடிசை வீடுகளுக்கு சேர்த்து 572 வீடுகள் கட்ட வேண்டும்.

104வது வார்டில் உள்ள திடீர் நகர் பகுதியில் சுமார் 850 வீடுகளுக்கு அதை சுற்றி மாநகராட்சிக்கு சொந்தமான 22 ஏக்கர் காலியிடத்தில் குடிசை மாற்று வாரியத்துக்கு வகை மாற்றம் செய்து அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வேண்டும். 104வது வார்டில் உள்ள ஓசான்குளம் குடிசை மாற்று வாரியத்தின் 45 வருடங்களுக்கு மேற்பட்ட குடியிருப்புகளை இடித்து விட்டு புதிய குடியிருப்புகளை கட்ட வேண்டும். 104வது வார்டில் உள்ள கங்காதீஸ்வரர் கோயில் தெரு குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் 56 வீடுகள் மிகவும் பழுதடைந்து இருப்பதால், இடித்து விகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். 107வது வார்டில் உள்ள எஸ்.எஸ்.நகர் குடிசை மாற்று வாரியம் குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்து இருக்கிறது. அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்பு இடித்து விட்டு புதிய குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: