அம்பை அருகே 400 ஆண்டுகள் பழமையான சதிக்கல் கண்டுபிடிப்பு

அம்பை:  400 ஆண்டுகள் பழமையான சதிக்கல் அம்பை அருகே கண்டுபிடிக்கப்பட்டது. நெல்லை மாவட்டம், அம்பை அருகே கவுதமபுரி  கிராமத்தில் வண்டன்குளம் உள்ளது. அந்த குளத்தின் கரையில் ஒரு சதிக்கல் இருப்பதை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தினர் கள ஆய்வின்போது கண்டுபிடித்தனர்.  இதுகுறித்து ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு கூறியதாவது: சதி வழக்கம் கொண்டகாலத்தில் இறந்துபோன கணவனுடன் மனைவியும் உடன்கட்டை ஏறி உயிர் துறந்துள்ளனர். அதன்பின்பு அவர்களின் நினைவாக எடுக்கப்படும் நினைவுச்சின்னம்தான் சதிக்கல் எனப்படுகிறது. வண்டன்குளக்கரையில் உள்ள சதிக்கல், 2 அடி உயரம் 1 அடி அகலம் உள்ளது. இதன் அமைப்பைக்கொண்டு பார்த்தால் 400 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: