திருமணத்துக்கு பின் 5, 6 பெண்களுடன் தொடர்பில் இருந்தேன் பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் ஓபன் டாக்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் அப்துல் ரசாக் (39), பாகிஸ்தான் டிவி ஒன்றில் பேசியதாவது: எனக்கு திருமணத்துக்கு பிறகு 5 - 6 பெண்களுடன் தொடர்பு இருந்தது. இந்த உறவுகளுக்கு காலாவதிக் காலமும் உள்ளது. சில உறவுகள் ஒரு வருடம் வரை நீடித்துள்ளது. இன்னும் சில உறவுகள் ஒன்றரை வருடம் வரையும் நீடித்துள்ளது. இந்த உறவுகள் திருமணத்துக்கு பிறகுதான் இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertising
Advertising

முன்னதாக, அப்துல் ரசாக் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘நான் ஹர்திக் பாண்டியாவின் ஆட்டத்தை கூர்ந்து கவனித்து வருகிறேன். அவர் பந்தை ஆடுகளத்தில் மிகவும் கடுமையாக ஹிட் செய்யும்போது உடலை பேலன்ஸ் செய்யும்போது பல தவறுகள் உள்ளது. அவரது கால்களின் நிலையை பார்க்கும்போது, அது சில நேரங்களில் அவரை கீழே தள்ளிவிடுகிறது. அவருக்கு என்னால் பயிற்சி அளிக்க முடியும் என்று உணர்கிறேன்.

இந்தியா  பாகிஸ்தான் இடையே அரசியல் தொடர்பான பிரச்னை இருப்பதால், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பயிற்சி கொடுக்கலாம். ஹர்திக் பாண்டியாவை என்னால் சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக மாற்ற முடியும்’ என்று பதிவிட்டு சர்ச்சையை கிளப்பினார். இந்திய அணி வீரருக்கு பயிற்சி அளிப்பதாக கூறியதும், திருமணத்திற்கு பிறகு 5, 6 பெண்களுடன் தொடர்பில் இருந்ததாக அப்துல் ரசாக் கூறியதும் பாகிஸ்தானில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Related Stories: