தூத்துக்குடியில் வேன் மீது ஏறி நின்று போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை; அது கற்பனை கதை; முதலமைச்சர் விளக்கம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்றது. காவல்துறை முதல்வர் சார்ந்த துறையாக உள்ளதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் எவ்வாறு உள்ளது என்று எதிர்கட்சிகள் சார்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதே போல தான் காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவர் ராமசாமி போராட்டங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பினார். தூத்துக்குடியில் வேனில் ஏறி துப்பாக்கிச் சூடு நடத்தியதும் குறித்தும் கேள்வி எழுப்பினார். இதே போல பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், கொலை, கொள்ளை அதிகரித்துள்ளதாக கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடியில் வேன் மீது ஏறி நின்று போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்று விளக்கம் அளித்தார். வேன் மீது நின்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறுவது கற்பனை கதை என்றும் தெரிவித்தார். மேலும் காவல்துறைக்கு இன்று பல்வேறு புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

* தஞ்சாவூர், நாமக்கல், மதுரை, தருமபுரி மாவட்டங்களில் ரூ.14.75 கோடியில் அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் உருவாக்கப்படும்

* 4-வது காவலர் ஆணையம் அமைப்பது அரசின் பரிசீலனையில் உள்ளது

* 72,000 காவலர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 5 லிட்டர் எரிபொருள் படி வழங்கப்படும்

* காவலர் பதக்கங்களின் எண்ணிக்கை 1500-ல் இருந்து 3000 ஆக உயர்த்தப்படும்

* கரூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் பிரிவு உருவாக்கப்படும்

* ரூ.8.54 கோடியில் 1500 தீயணைப்பு பணியாளர்களுக்கு தற்காப்பு சாதனங்களுடன் கூடிய உடைகள் வழங்கப்படும்

* ரூ.1 கோடி செலவில் 50 ஆளில்லா விமானங்கள், டிரோன்ஸ், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிக்கான உபகரணங்கள் வாங்கப்படும்

* காவல்துறையின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது

Related Stories: