தூத்துக்குடியில் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த காவல் ஆய்வாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காவல் ஆய்வாளர் மீது புகார் ஒன்று எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி சாத்தன் நிலையம் காவல் நிலையத்தில் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காவல் ஆய்வாளர் கஜேந்திரன் மீது நீதிமன்ற உத்தரவுப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தட்டார்மடம் காவல் நிலையத்தின் ஆய்வாளராக கஜேந்திரன் என்பவர் பணியாற்றி வந்தார். மேலும் அவர் பணியாற்றிய போது இரு தரப்பினரிடையே நிலப் பிரச்சனையில் வழக்கறிஞர் ஒருத்தரப்பிற்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இதனால் அந்த பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ஜேம்ஸ் ஜேசுதுரை என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்ததாக சொல்லப்படுகிறது.

இதனை தொடர்ந்து இதனால் ஆத்திரம் அடைந்த கஜேந்திரன் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றுக்காக ஆஜர் ஆக வந்த போது வழக்கறிஞர் ஜேம்ஸ் ஜேசுதுரையை பார்த்து அவதூராக பேசியதோடு மட்டுமின்றி கொலை மிரட்டலும் விடுத்ததாக சொல்லப்படுகிறது. மேலும் இதுகுறித்து வழக்கறிஞர் ஜேம்ஸ் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் அவர் வழக்கு ஒன்றினை தொடர்ந்தார். மேலும் அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. இதனை அடுத்து ஆய்வாளர் கஜேந்திரன் மீது 294 b மற்றும் 506 i ஆகிய பிரிவுகளின் கீழ் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: