சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு அரசு உதவவில்லை: திமுக குற்றச்சாட்டு

சென்னை: மக்களுக்காக போராடுபவர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுப்பதாக திமுக உறுப்பினர் ஐ.பெரியசாமி சட்டப்பேரவையில் குற்றம் சாட்டினார். மதுக்கடைக்கு எதிராக போராட சென்ற நந்தினி திருமணம் நடைபெற இருந்த நிலையில் கைது செய்யப்பட்டார் என்று ஐ.பெரியசாமி சட்டப்பேரவையில் தெரிவித்தார். வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட நடராஜர் சிலையை மீட்க போலீஸ் அதிகாரி முயன்ற போதும் அரசு உதவவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு பல அதிகாரிகளை உதவிக்காக அரசு நியமித்துள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்தார். நீதிமன்ற உத்தரவுப்படி பொன் மாணிக்கவேலுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன என்று முதல்வர் தெரிவித்தார். பொன் மாணிக்கவேல் 2012ஆம் ஆண்டிலிருந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் நீடிக்கிறார். சிலை கடத்தல் பிரிவில் 33 வழக்குகள் மட்டுமே அவரால் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் முதல்வர் பேசினார். ஆண்டுக்கு சராசரியாக 4 வழக்குகள் தான் பதிவாகி உள்ளன - 7 வழக்குகளில் மட்டுமே குற்றவாளிக்கு தண்டனை கிடைத்தது என்றும் முதல்வர் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

குட்கா, புகையிலை பொருள் ஊழல் வழக்கை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது பற்றி முதல்வர் பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார். சிபிஐ விசாரிக்க உத்தரவிட்ட நீதிபதி பற்றி பல விஷயங்கள் உள்ளன. அதையெல்லாம் சொன்னால் சர்ச்சையாகிவிடும் என்று முதல்வர் தெரிவித்தார். சிபிஐ விசாரணைக்கு பல வழக்குகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் ஐ.பெரியசாமி(திமுக) பேசியதற்கு எடப்பாடி பதிலளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த அறிக்கையை படிக்காமலேயே நீதிமன்றம் சிபிஐ-க்கு விசாரணையை மாற்றியுள்ளது என்று முதலவர் தெரிவித்தார்.

Related Stories: