×

வேலூர் மக்களவைத் தேர்தல் : அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், செயலாளர்கள் என 209 பேரை பொறுப்பாளர்களாக நியமித்தது அதிமுக

வேலூர் : வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலுக்கான பொறுப்பாளர்களாக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் என 209 பேரை நியமித்து அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர் ஏ.சி. சண்முகம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தேர்தல் பணிகளை மேற்கொள்ள துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் குழு அமைத்து அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

இந்த குழுவில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் என 209 பேரை அதிமுக தலைமை நியமித்துள்ளளது. தேர்தல் பொறுப்பாளர்கள் அனைவரும் திங்கட்கிழமை காலை 10 மணி முதல் வேலூர் தொகுதியிலேயே இருந்து தேர்தல் பணிகளை கவனிக்க வேண்டும் என்பது அதிமுக தலைமையின் உத்தரவாகும். இதனிடையே வேலூர் தொகுதியில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் வேட்புமனு பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

*ஆம்பூர் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. முனுசாமி தலைமையில் 25 பேர் நியமனம்.

*வேலூர் சட்டமன்ற தொகுதிக்கு அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 31 பேர் நியமனம்.

*குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு அமைச்சர் தங்கமணி, ஆர். வைத்திலிங்கம் தலைமையில் 22 பேர் நியமனம்.

*வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு அமைச்சர் கே.பி. அன்பழகன் தலைமையில் 50 பேர் நியமனம்.

*கீழ்வைத்தியணான் குப்பம் சட்டமன்ற தொகுதிக்கு அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் 43 பேர் நியமனம்.  



Tags : Ministers, MLAs, Secretaries, Vellore, Lok Sabha Election, AIADMK
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...