×

வேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்திவைப்பு

வேலூர்: வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய நீதி கட்சி தலைவராக உள்ள ஏ.சி.சண்முகம், அதிமுக சின்னத்தில் எப்படி போட்டியிட முடியும் என கேள்வி எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து ஏ.சி.சண்முகத்தின் வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5ம் வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. மேலும் இந்த தேர்தலில் போட்டியிட இதுவரை 50 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். கடைசி நாளான நேற்று மட்டும் 21 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த தொகுதி தேர்தலில், போட்டியிட திமுக சார்பில் கதிர் ஆனந்த், அதிமுக-வின் கூட்டணி கட்சி சார்பில் ஏ.சி.சண்முகம், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மக்களை நீதி மய்யம் கட்சி சார்பிலும், டிடிவி தினகரனின் அமமுக சார்பிலும்  யாரும் போட்டியிடவில்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வேலூர் தொகுதியில் திமுக - அதிமுக - நாம் தமிழர்  கட்சி என மும்முனை போட்டி நிலவுகிறது. மேலும் வேலூர் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மனுவை வாபஸ் பெற ஜூலை 22ம் தேதி கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுக்கள் பரிசீலனையின் போது, அதிமுக-வின் கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டது. அவரது வேட்புமனுவில் சட்டரீதியாக சிறு பிழை இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இவர், புதிய நீதி கட்சியின் தலைவராக இருப்பதால், அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் எப்படி போட்டியிட முடியும் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும், சி.வி.சண்முகம், இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிடுவதற்கான நகலை பெற்று, அதில் வேலூர் தேர்தல் நடத்துனர் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியரான சண்முக சுந்தரத்திடம் கடிதத்தை வழங்கிய பிறகு அவரது மனு ஏற்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தற்போது, இது தொடர்பாக சி.வி.சண்முகம் தந்து புதிய கட்சி ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Tags : Vellore, Lok Sabha constituency, AIADMK alliance candidate, AC Shanmugam, nomination
× RELATED ஈரோடு பவானி சட்டமன்ற தொகுதியில் தடுப்பூசி போட்டால் தங்க காசு