×

பந்தலூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பணி இடைநீக்கம்: பெண் ஊழியர் அளித்த பாலியல் புகாரின் பேரில் நடவடிக்கை

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பெண் ஊழியர் அளித்த புகாரின் பேரில் பந்தலூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் இதை தொடர்ந்து பந்தலூர் குற்றவியல் நீதித்துறை நடுவராக செந்தில் முரளி என்பவர் கடந்த 1 ஆண்டிற்கு மேலாக பணியாற்றி வந்தார். மேலும் இவர் இதற்கு முன்பு காங்கேயம் நீதிமன்றத்தில் பணியாற்றிய போது அங்கு பணியாற்றியவர்களிடம் மிகவும் கடுமையாக நடந்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து இந்த நிலையில் அங்கு நீதிமன்றத்தில் வேலை செய்த ஒரு பெண் ஊழியர் தன்னை தகாத வார்த்தையில் பேசியதாகவும், தாக்கியதாகவும் மற்றும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் நீதிபதி செந்தில் முரளி குறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்ததாக சொல்லப்படுகிறது.

மேலும் இந்த புகாரின் பேரில் இரண்டு ஆண்டுகளாக துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அவ்வாறு நடத்தப்பட்ட விசாரணையில் நீதிபதி செந்தில் முரளி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டானது உறுதி செய்யப்பட்டது. மேலும் இந்நிலையில் நேற்று முன்தினம் நீதிபதி செந்தில் முரளியை பணியிடை நீக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட நீதிபதி வடமலை, பந்தலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் செந்தில் முரளியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை தொடர்ந்து பெண் ஊழியர் அளித்த புகாரின் பேரில் பந்தலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Pandalur Criminal Court Judge, suspension of work, female employee, sexual complaint, action
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்