×

அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய அனுமதி கோரி காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய திட்டம்

பெங்களூரு: மும்பையில் இருக்கும் அதிருப்தி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்வதற்கு காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்ற நீதிபதியிடம் மனு கொடுக்க உள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமி அரசுக்கு ஆளுநர் வஜூபாய் வாலா கெடு விதித்துள்ளார். அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 16 பேர் மீது கொறடா உத்தரவு பிறப்பிக்க முடியாத நிலையில் குமாரசாமி நீதிமன்றத்தை நாட உள்ளார். ஆளுநரின் உத்தரவை எதிர்த்து குமாரசாமி நீதிமன்றத்தில் முறையிட திட்டமிட்டுள்ளார்.

பலகட்ட பரபரப்பான சூழ்நிலையில் கர்நாடக சட்டசபையானது கூடுகிறது. நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று பாஜக தரப்பில் வைத்த கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் மீது விவாதத்திற்கு அழைப்பு விடுத்தார். அதன் மீது சித்தராமையா, குமாரசாமி உள்பட்ட பல தலைவர்கள் பேசியபோது பாஜக மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை வைத்தனர். பாஜக தங்களுடைய எம்.எல்.ஏக்களை கடத்தி சென்று பணம் கொடுத்து மும்பையில் பதுக்கி வைத்திருப்பதாக குற்றச்சாட்டை பதிவு செய்தனர்.

மும்பையில் தங்கியுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கொறடா உத்தரவின் படி நடவடிக்கை எடுப்பதற்கு தங்களுக்கு முழு அதிகாரம் இருக்கிறது. அந்த அதிகாரம் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த பிறகு தான் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று சித்தராமையா கோரிக்கை வைத்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் இரவு முழுவதும் சட்டசபையிலேயே தங்கி இருந்து பாஜக எம்எல்ஏக்கள் உள்ளிருப்பு தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் முதல்வர் குமாரசாமி மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய்யப்பட உள்ளது. மூத்த வழக்கறிஞரான கபில் சிபில் தான் இந்த மனுவை தாக்கல் செய்ய இருக்கிறார்.

Tags : Congress, MLA, disqualification
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...