உலக கோப்பை மறந்தாச்சி ஊர் சுற்றும் நேரம் வந்தாச்சி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் முடிந்து  கிட்டதட்ட ஒரு வாரம் ஆகிறது. ஊரெல்லாம் அதே பேச்சாக இருந்தாலும் கிரிக்கெட் அணிகள் உலக கோப்பையை மறந்து அடுத்த போட்டிக்கு தயாராக வருகின்றன. இந்திய அணி ஆக.3ம் தேதி முதல் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. அதனை தொடர்ந்து செப்.15 முதல் தென் ஆப்ரிக்காவில் விளையாடுகிறது. அதேபோல் வங்கதேசம் ஜூலை 26  முதல் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. மீண்டும் இங்கிலாந்து செல்லும் ஆஸ்திரேலியா அங்கு ஆக.1ம்தேதி முதல் ஆஷ் தொடரில் விளையாடகிறது. அதற்கு முன்பாக இங்கிலாந்து  ஜூலை 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஒரு ெடஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.  இலங்கைக்கு சுற்றுப் பயணம் செல்லும் நியூசிலாந்து அங்கு ஆக.14ம் தேதி  முதல் டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இப்படி ஒவ்வொரு நாடும் ெவற்றி தோல்விகளை மறந்து மீண்டும் களம் காண உள்ளன. குறிப்பாக 2020ல் நடைபெற உள்ள டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு அதிக எண்ணிக்கையில் டி20 போட்டிகளில்  விளையாட திட்டமிட்டு உள்ளன.

Advertising
Advertising

Related Stories: