மும்பை: உலக கோப்பை வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டிரெவர் பேலிஸ்(56). ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர் 2015ம் ஆண்டு முதல் இங்கிலாந்து பயிற்சியாளராக இருந்து வருகிறார். இப்போது ஐபிஎல் அணியான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 7 ஆண்டுகளாக சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளராக டாம்மூடி இருந்தார். இது குறித்து சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்ட நேற்று அறிவிப்பில், ‘மிகவம் கவனத்துடன் பரிசீலனை செய்து டாம் மூடிக்கு பதிலாக புதிய பயிற்சியாளரை நியமிக்க முடிவு செய்தோம். உலக கோப்பை வென்ற இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் டிரெவர் பேலிஸ் பலமுறை வெற்றிகரமான பயிற்சியாளர் என்பதை நிரூபித்துள்ளார். அவர் சன்ரைசர்ஸ் அணியை முன்னோற்ற பாதையில் கொண்டு செல்வார். அதே நேரத்தில் கடந்த 7 ஆண்டுகளில் 5 முறை ஃப்ளே ஆப் சுற்றுக்கும், 2016ம் ஆண்டு கோப்பையை வெல்ல காரணமாக இருந்த எங்கள் பயிற்சியாளர் டாம் மூடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அவர் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறாம்’ என்று தெரிவித்துள்ளது.