டேபிள் டென்னிஸ் அணியை வாங்கிய ஐஸ்வர்யா தனுஷ்

ஐபிஎல், ஐஎஸ்எல், புரோ கபடி போன்று டேபிள் டென்னிஸ் விளையாட்டுக்காக தொடங்கப்பட்டது அல்டிமேட் டேபிள் டென்னிஸ்  தொடர். இதன் 3வது சீசன்  இம்மாதம் 25ம் தேதி முதல் டெல்லியில்  தொடங்க உள்ளது. இந்த தொடரில் சென்னை லயன்ஸ்,  தபாங் டெல்லி, கோவா சேலஞ்சர்ஸ், புனேரி பல்டன், மவேரிக்ஸ் கொல்கத்தா, யு மும்பா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் சென்னை லயன்ஸ் அணியை திரைப்பட இயக்குநரும், நடிகர் ரஜினிகாந்தின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா வாங்கியுள்ளார். சென்னை  அணியில் நட்சத்திர வீரர் சரத் கமல்,  யாஷினி சிவசங்கர், அனிர்பன் கோஷ்,  மதுரிகா பட்கர்,  டியகோ அபோலோனியா, பெட்ரிசா சோல்ஜா ஆகியோர் இடம்  பெற்றுள்ளனர்.  பீட்டர் ஏஞ்ஜல், முரளிதரராவ் ஆகியோர் பயிற்சியாளர்களாக  உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த நட்சரத்திர ஆட்டக்காரர் சத்யன் ஞானசேகரன்  தபாங் டெல்லி அணிக்காக விளையாட உள்ளார்.

Advertising
Advertising

Related Stories: