ஆப்ரிக்கா கோப்பை கால்பந்து 3வது இடம் பிடித்த நைஜிரியா

கெய்ரோ:  ஆப்ரிக்க நாடுகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியில் நைஜிரியா  1-0 என்ற கோல் கணக்கில் துனிஷியா வீழ்த்தி 3வது இடத்தை பிடித்து. ஆப்ரிக்க நாடுகளுக்கு இடையிலான ஆப்ரிக்கா நேஷன்’ கோப்பைக்கான கால்பந்து போட்டி ஜூன் 21ம தேதி எகிப்தில் தொடங்கியது. மொத்தம் 24 நாடுகள் பங்கேற்றன. அரையிறுதிப் போட்டிகளில்  செனகல் 1-0 என்ற கோல் கணக்கில் துனிஷியாவையும்,  அல்ஜிரியா 2-1 என்ற கோல் கணக்கில் நைஜிரியாவையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில் 3வது இடத்துக்கான போட்டியில் நேற்று  துனிஷியா-நைஜிரியா அணிகள் மோதின. நைஜிரிய அணி வீரர்  இகலோ போட்டி  தொடங்கிய 3வது நிமிடமே  கோல் அடித்தார். அதன் பிறகு 2 அணிகளும் கோல் அடிக்க  மேற்கொண்ட முயற்சிகள் கைகொடுக்கவில்லை. அதனால் ைநஜிரியா1-0 என்ற கோல் கணக்கில் வென்று தொடரில் 3வது இடத்தை பிடித்து. கெய்ரோவில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில்  செனகல்-அல்ஜிரியா அணிகள் மோதுகின்றன.

Related Stories: