×

தேச விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாக டிக்டாக், ஹலோவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்: தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை

புதுடெல்லி: தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக டிக்டாக், ஹலோ ஆப்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முறையான பதில் அளிக்காவிட்டால் இந்த ஆப்கள் தடை செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளது.டிக்டாக், ஹலோ ஆகிய சமூக ஊடகங்களுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. இதை பயன்படுத்தி அந்த இரு ஊடகங்களும் தேசவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாக ஆர்எஸ்எஸ்.சின் துணை அமைப்பான சுதேஷி ஜக்ரான் மஞ்ச்  (எஸ்ஜேஎம்) அமைப்பு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியது. இது தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த அமைச்சகம் டிக்டாக், ஹலோ ஆப் நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு  21 கேள்விகளுடன் கூடிய நோட்டீசை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

* இந்தியாவில் டிக்டாக், ஹலோ பயன்படுத்துவோர் விவரங்களை இப்போதும், எதிர்காலத்திலும் வெளிநாடுகள் அல்லது 3ம் நபர்கள் அல்லது தனியார் நிறுவனங்களுக்கு மாற்றம் செய்ய மாட்டோம் என உறுதியளிக்க வேண்டும்.
* பொய்யான செய்திகள் இந்த ஊடகங்களில் பரப்பப்பட்டால் இந்திய சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
*  பிற சமூக வலைதளங்களில் 11,000 மார்பிங் செய்யப்பட்ட அரசியல் விளம்பரங்களை வெளியிடுவதற்கு ஹலோ நிறுவனம் பணம் கொடுத்துள்ளதா? என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.
* இந்தியாவில் குழந்தைகள் என்பதற்கான நிர்ணய வயது 18 ஆக உள்ள நிலையில், உங்கள் சமூக ஊடங்களை பயன்படுத்துவதற்கான வயதை 13 ஆக குறைத்து குழந்தைகளின் தனியுரிமையில் தலையிடுவது கவலையளிக்கிறது.
* இது தொடர்பாக முறையான விளக்கம் அளிக்காவிட்டால் இரு நிறுவனங்களும் தடை செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டிக்டாக், ஹலோ நிறுவனங்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்ைகயில், ‘உள்ளூர் மக்களின் ஆதரவின்றி இந்தியாவில் எங்களால் வெற்றி பெற்றிருக்க முடியாது. இது தொடர்பாக தகுந்த பதிலை மத்திய அரசுக்கு அளிப்போம்.  அடுத்த 3 ஆண்டுகளுக்கு எங்களின் தொழில்நுட்ப கட்டமைப்பை வலுப்படுத்த இந்தியாவில் 100 கோடி டாலரை முதலீடு செய்ய உள்ளோம்,’ என கூறப்பட்டுள்ளது.

Tags : Engaging , anti-national , Dickdock, Hello, ban
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்