×

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி சகோதரர் பெயரில் உள்ள 400 கோடி பினாமி சொத்து முடக்கம்: நொய்டாவில் வருமான வரித்துறை அதிரடி

புதுடெல்லி: உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதியின் சகோதரர், அவரது மனைவி ஆகியோருக்கு சொந்தமான 400 கோடி மதிப்புள்ள பினாமி சொத்தை வருமான வரித்துறை  முடக்கியது.டெல்லி அருகே உள்ள நொய்டாவில் மொத்தம் 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குடியிருப்பு வளாகத்தை ஆனந்த் குமார், அவரது மனைவி விசிட்டர் லதா ஆகியோரின் பெயரில் உள்ளது. டெல்லியைச் சேர்ந்த வருமான வரித்துறையின்  ‘பினாமி சொத்துக்கள் பரிமாற்ற தடுப்பு பிரிவு’ (பிபியு) கடந்த 16ம் தேதியிட்ட உத்தரவு மூலம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மாயாவதி சமீபத்தில்தான் ஆனந்த் குமாரை, பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய துணைத் தலைவராக  நியமனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

வருமான வரித்துறையின் ‘பினாமி சொத்து பரிமாற்றங்கள் தடுப்புச் சட்டம்- 1988’ன் பிரிவு 24(3)கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நொய்டாவில் 7 ஏக்கரில் இந்த குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. இந்த ₹400 கோடி மதிப்புள்ள பினாமி  சொத்து குமார் அவரது மனைவி ஆகியோர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதை வருமான வரித்துறை கண்டுபிடித்தது. இதையடுத்து, பினாமி சொத்து தடுப்புச் சட்டத்தின்கீழ் அதிரடி நடவடிக்கையை வருமான வரித்துறை எடுத்துள்ளது.பினாமி சொத்து தடுப்புச் சட்டத்தை மீறுவோருக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அதேபோல், பினாமி சொத்து மதிப்பில் 25 சதவீதம் வரையில் அபராதம் செலுத்த வேண்டும். பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பின்னர், பினாமி சொத்து பரிமாற்ற தடுப்பு திருத்தச் சட்டம் 2016ன் கீழ், பினாமி சொத்துகள் பறிமுதல் நடவடிக்கையை வருமான வரித்துறை அதிரடியாக எடுத்து வருகிறது.

Tags : Bahujan Samaj , Mayawati,brother ,property tax
× RELATED உ.பி தேர்தலில் போட்டியிடும் 125...