புதுடெல்லி: பார்னோ மித்ரா உட்பட வங்க மொழி நடிகர், நடிகைகள் 12 பேர் பாஜ.வில் இணைந்துள்ளனர்.மேற்கு வங்கத்தில் மக்களவை தேர்தலுக்கு முன்பிருந்து தற்போது வரை திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள், எம்எல்ஏ.க்கள், எம்பி.க்கள் பலர் பாஜ.வில் இணைந்து வருகின்றனர். அதேபோல், மேற்கு வங்கத்தை சேர்ந்த வங்க மொழி சினிமா மற்றும் டிவி நடிகர், நடிகைகளும் இக்கட்சியில் இணைவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், மேற்கு வங்க பாஜ தலைவர் திலிப் கோஷ் தலைமையில் டெல்லியில் உள்ள பாஜ தலைமையகத்தில் நேற்று வங்கமொழி நடிகர்கள் 12 பேர் பாஜ.வில் இணைந்தனர். பர்னோ மித்ரா, ரிஷி கவுசிக், கஞ்சனா மொய்த்ரா, ரூபான்ஜனா மித்ரா மற்றும் பிஸ்வாஜித் கங்குலி உள்ளிட்ட திரைப்பட, டிவி நடிகர்கள் இணைந்துள்ளனர்.