அம்பர்நாத்-உல்லாஸ்நகர் இடையே ரயிலை நடுவழியில் நிறுத்திவிட்டு சிறுநீர் கழித்த இன்ஜின் டிரைவர்

மும்பை: ரயிலை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய டிரைவர் தண்டவாளத்தில் சிறுநீர் கழித்ததால் மும்பை புறநகரில் ரயில் சேவை பாதித்தது. சம்பவத்தன்று மத்திய ரயில்வேயில் புறநகர் ரயில் ஒன்று சி,எஸ்.எம்.டி. நோக்கி சென்று கொண்டிருந்தது. அம்பர்நாத் ரயில் நிலையக்குக்கும் உல்லாஸ்நகர் ரயில் நிலையத்துக்கும் இடையே இஞ்ஜின் டிரைவர் ரயிலை நிறுத்துவிட்டு கீழே இறங்கி இஞ்ஜினின் முன்னாள் நின்றபடி தண்டவாளத்தில் சிறுநீர் கழித்தார். அப்போது டி.வி.சேனல் ஒன்றில் வேலை பார்க்கும் ஒருவர் இதனை அருகில் இருக்கும் மேம்பாலத்தில் நின்றபடி வீடியோவில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இஞ்ஜின் டிரைவரின் நடவடிக்கையை பார்த்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இஞ்ஜின் டிரைவரின் நடவடிக்கையால் மத்திய ரயில்வேயின் மெயின் வழி தடத்தில் ரயில் சேவை பாதித்தது. இதுபற்றி ரயில்வேயின் உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது இஞ்ஜின் டிரைவர்கள்  பற்றாக்குறை இருப்பதாக ஒப்புக்கொண்டார். இதனால் ஒரு இஞ்ஜினில் ஒரு டிரைவர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நீண்ட தூர ரயில்களில், ரயில் புறப்படுவதற்கு முன் டிரைவர்களுக்கு 3 மணி நேரம் அவகாசம் வழங்கப்படுகிறது. அதற்குள் அவர்கள் தங்கள் தேவைகளை முடித்துகொண்டு இஞ்ஜினை இயக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். இதன் இடையே, வீடியோ படத்தின் படி ரயிலை நிறுத்திவிட்டு டிரைவர் சிறுநீர் கழிக்கும் சம்பவம் மத்திய ரயில்வேயில்தான் நடந்தது என்று உயர் அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். ஆனால் எப்போது நடந்தது என்று தெரியாது என்றும் அதுபற்றி விசாரிக்க வேண்டியிருப்பதாகவும் அவர்கள் கூறினர். ரயிலை நிறுத்திவிட்டு இஞ்ஜின் டிரைவர் கீழே இறங்கி தண்டவாளத்தில் சிறுநீர் கழிப்பது இது முதல் தடவை அல்ல. முன்பு ஒரு முறை நீண்ட தூர ரயில் ஒன்று நாலாசோபாரா ரயில் நிலையத்துக்கும் வசாய் ரயில் நிலையத்துக்கும் இடையே நிறுத்தப்பட்டது. அதில் இருந்து கீழே இறங்கி வந்த உதவி இஞ்ஜின் டிரைவர் தண்டவாளத்தில் சிறுநீர் கழித்துவிட்டு பிறகு ரயிலில் ஏறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: