×

பால்கோட் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கான விமான கட்டணங்கள் 15% முதல் 20% வரை குறைவு

டெல்லி: இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் தனது வான்வெளிகளை திறந்த நிலையில் அமெரிக்கா மற்றும்  ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் விமானங்களின் டிக்கெட் விலையானது தற்போது 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதை தொடர்ந்து பால்கோட் தாக்குதலை அடுத்து பதற்றமான சூழல் நிலவியதால் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்பரப்பில் பறப்பதற்கு அந்நாடு தடை விதித்து வான்வெளிகளையே மூடியது. மேலும் இதை தொடர்ந்து அமெரிக்கா மற்றும்  ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் விமானங்களும், அங்கிருந்து இந்திய வரும் விமானங்களும் நீண்ட தூரம் சுற்றி பயணிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் இதனால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மட்டும் சுமார் 430 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 16ம் தேதி இந்திய விமானங்கள் பார்ப்பதற்கு பாகிஸ்தான் தனது வான்வெளிகளை திறந்தது. மேலும் இதனை அடுத்து அமெரிக்கா மற்றும்  ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் விமான கட்டணங்கள் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை குறைந்துள்ளன. இதனை தொடர்ந்து வளைகுடா நாடுகளுக்கான விமான கட்டணம் 30 சதவீதம் வரை குறைந்துள்ளது. மேலும் டெல்லியில் இருந்து அபுதாபி செல்வதற்கான கட்டணம் 30 ஆயிரம் ரூபாயில் இருந்து 17 ஆயிரம் ரூபாயாக குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து அதேபோல் லண்டன் செல்வதற்கான கட்டணம் 80 ஆயிரம் ரூபாயில் இருந்து 63 ஆயிரம் ரூபாயாக குறைந்துள்ளது. மேலும் பயண நேரங்களும் வெகுவாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Baloo Code attack, continued, US, European country, air fare, 15% - 20%, decrease
× RELATED அதிமுக ஆட்சியில் வராத வாறுகால்...இப்போ...