வேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு: இம்முறை மும்முனை போட்டி

வேலூர்: ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற உள்ள வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிட இதுவரை 50 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். வேலூர் தொகுதி தேர்தலில் கடந்த 11ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்று மதியம் 3 மணியளவில் நிறைவு பெற்றது. கடைசி நாளான இன்று 21 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும் என்றும், மனுவை வாபஸ் பெற ஜூலை 22ம் தேதி கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 11ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கலின் போது, அதிமுக-வின் கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் காணாது மனுவை தாக்கல் செய்தார். அதேபோல, நேற்றைய தினம் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 3 கட்சிகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட காட்சிகளாக உள்ளன. மீதமுள்ள அனைத்து வேட்மனுக்களும் சுயேச்சை மற்றும் சிறிய பதிவு செய்யப்படாத கட்சிகள் ஆகும். சட்டமன்ற தேர்தலில் முழு கவனம் செலுத்துவதால் வேலூர் மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் அறிவித்துள்ளார். வேலூர் மக்களவைத் தொகுதியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரனின் அமமுகவும் போட்டியிடாத நிலையில் அதிமுக - திமுக - நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

Related Stories: