கக்கன், நல்லக்கண்ணு குடும்பத்தினருக்கு வாடகையில்லா வீடுகள் ஒதுக்கப்படும்: சட்டப்பேரவையில் தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கக்கன், நல்லக்கண்ணு குடும்பத்தினருக்கு வாடகையில்லா வீடுகள் ஒதுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்த முன்னாள் அமைச்சர் கக்கன் குடும்பத்தினர் மற்றும் கம்யூனிஸ்டு தலைவர் நல்லக்கண்ணு குடும்பத்தினர், கடந்த மே மாதம் அங்கிருந்து வெளியேற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர்கள் குடியிருந்த வந்த சென்னை தி.நகரில் உள்ள தமிழ்நாடு அரசின் குடியிருப்பு வாரிய வீடுகள் 25 ஆண்டுகள் பழமையானதால், அதை இடித்து விட்டு புதிய வீடு கட்டும் நோக்கில், அவர்கள் அங்கிருந்து வெளியே தமிழகஅரசு உத்தரவிட்டது.

இந்த விவகாரம் பூதாகாரமாக எழுந்த நிலையில், அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கப்படும் என தமிழக அரசு உறுதி அளித்தது. இந்த நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவையில், வாடகை ஒப்பந்தத்திற்கான கால அவகாசம் நீட்டிப்பிற்கான சட்டத்திருத்த மசோதாவை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதில் வாடகை ஒப்பந்தத்திற்கான கால அவகாசம் 90 நாட்களில் இருந்து 120 நாட்களாக நீடிக்கப்பட்டுள்ளது. சொத்து உரிமையாளரும் வாடகைதாரரும் எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் எனவும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து பேசிய தமீமும் அன்சாரி, கக்கன் மற்றும் நல்லக்கண்ணு குடும்பத்தினருக்கு வீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அப்போது  நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய, தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கக்கன், நல்லக்கண்ணு ஆகியோரின் தியாகத்தை போற்றும் வகையில், அவர்களுக்கு வாடகையில்லா வீடுகள் ஒதுக்கப்படும் என அறிவித்தார். மேலும் கக்கன், நல்லகண்ணு குடும்பத்தினர் வீடுகளிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படவில்லை எனவும் அவர் விளக்கமளித்தார்.

Related Stories: