அட்டப்பாடி புதூர் பவானி ஆற்றின் குறுக்கே தொங்குப்பாலம் அமைப்பு

பாலக்காடு: பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேலே தோடுங்கி கீழே தோடுங்கி ஆகிய ஊர்களில் 70 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் அன்றாடம் புதூார் பகுதிக்கு வந்து செல்ல வேண்டுமென்றால் 32 கிமீ,. காடு, மலை கடந்து வந்து தங்களது தேவைகளை பூர்த்தி செய்து செல்லவேண்டிய கட்டாயத்திற்கு கடந்த சில ஆண்டுகளாக தள்ளப்பட்டிருந்தனர். இவர்கள் ஊர்களிலிருந்து பவானி ஆற்றை கடந்தால் புதூருக்கு எளிதில் வந்து செல்லலாம். சில நேரங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் ஆற்றை கடக்க முடியாது. எனவே கடந்த சில ஆண்டுகளாக அமைச்சர், உயர் அதிகாரிகள், எம்.எல்.ஏ., எம்.பி., ஆகியோரிடம் ஆற்றின் குறுக்கே தொங்குப்பாலம் அமைக்க வேண்டும் கோரிக்கை மனுக்கள் கொடுத்து போராடி வந்தனர்.

Advertising
Advertising

இந்நிலையில் தற்போது அட்டப்பாடி மலைவாழ் மக்கள் மேம்பாட்டுத் திட்ட அலுவலகமும், அட்டப்பாடி கூட்டுறவு சேவா குழுவும் ஒருங்கிணைந்து 9 லட்சத்து 60 ரூபாய் செலவீட்டில் 96 மீட்டர் நீளத்தில் பவானி ஆற்றின் குறுக்கே தொங்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்புவிழா விரைவில் நடைபெறவுள்ளது. இந்த தொங்குப்பாலத்தின் மூலமாக மேலே தோடுங்கி, கீழே தோடுங்கி ஆகிய கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வேலைக்கு செல்வதற்கும், மாணவ, மாணவியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கும் சென்று, வர வசதி ஏற்பட்டுள்ளது. ஆற்றின் நடுவே காண்கீரிட் தூண்கள் அமைத்து, பைப் ராடுகள் மூலம் பாலம் அமைக்கப்பட்டுள்ளது இதனால் தற்போது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றபட்டுள்ளது.

Related Stories: