காங்கோவில் மீண்டும் பரவத் தொடங்கியுள்ள எபோலா வைரஸ்: உலகளாவிய சுகாதார அவசரநிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. எச்சரிக்கை

கின்ஷாசா: மத்திய ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில் எபோலா என்னும் உயிர்க்கொல்லி வைரஸ் நோய் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதால் உலக நாடுகள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு ஐ.நா எச்சரித்துள்ளது. காங்கோ நாட்டுக்கு எல்லை தாண்டிச் சென்ற உகாண்டா நாட்டைச் சேர்ந்த 3 பேர், கடந்த 11ம் தேதி அங்கு திடீரென உயிரிழந்தனர். இதனால், காங்கோவில் எபோலா என்னும் உயிர்க்கொல்லி வரைஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. அதிலும், சுமார் 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட காங்கோவின் கோமா நகரில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. உகாண்டாவிலும் எபோலா வைரஸ் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எபோலா வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவலாம் என்பதால் இது உலகளாவிய சுகாதார அவசரநிலை சூழல் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertising
Advertising

இதன்மூலம் காங்கோவிற்கு நிதி உதவிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், மற்ற நாடுகளுக்கு பரவும் குறைவாக உள்ளதால் எல்லைகளை மூடும் அவசியம் இல்லை என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. எனினும், இதனிடையே ரவாண்டா, தெற்கு சூடான், உகாண்டா உள்ளிட்ட நாடுகள் அதிக கவனத்துடன் இருக்குமாறு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகளாவிய சுகாதார அவசரநிலை என்பது உலக சுகாதார அமைப்பால் விடுக்கப்படும் அபாய அறிவிப்பாகும. இந்த அறிவிப்பு 4 முறை மட்டுமே விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு உலக நாடுகளை அச்சுறுத்திய எபோலா வைரஸ் காங்கோவில் மட்டும் 1,673 உயிர்களை பலி வாங்கியது. தற்போது மீண்டும் எபோலா வரைஸ் பரவ தொடங்கியிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கோவில் கடந்த ஜனவரி மாதம் எபோலா வைரஸ் தாக்கப்பட்ட 370 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: