தென்காசி, செங்கல்பட்டு மாவட்டங்கள் புதிதாக உதயமாகின்றன: சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் இன்றையக் கூட்டம் கேள்வி நேரத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. செய்தி மற்றும் விளம்பரத்துறை, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை மானிய கோரிக்கைகள் மீது, விவாதன விவாதம் நடைபெற்று வருகிறது. பேரவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு துறைசார்ந்த அதிகாரிகள் பதில் அளித்து வந்தனர். இதனை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேரவை விதி 110வது விதியின் கீழ் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். அதில் கூறி இருப்பதாவது;

* தென்காசி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் புதிதாக உதயமாகின்றன: 1966-ம் ஆண்டில் இருந்து மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட வரலாற்றை பட்டியலிட்டு முதல்வர் பேசினார்.

* தமிழகத்தில் காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டு மாவட்டம், நெல்லையை பிரித்து தென்காசி மாவட்டம் புதிதாக உதயமாகின்றது

* 33ஆவது மாவட்டமாக கள்ளக்குறிச்சி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக 2 புதிய மாவட்டங்கள் உதயமாகி உள்ளன.

* தென்காசி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் விரைவில் தனி அதிகாரி நியமிக்கப்படுவார்

* விழுப்புரம் மாவட்டத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ 50 கோடி ஒதுக்கீடு

* ஓசூரில் சர்வதேச மலர் ஏல மையம் ரூ.20 கோடி செலவில் அமைக்கப்படும்

* தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து பிரித்து கும்பகோணத்தை விரைவில் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட வாய்ப்பு

* முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டம் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் செய்யலப்படுத்தப்பட உள்ளது.

* திட்டத்தின் மூலம் நகரங்களின் வார்டுகளிலும், கிராமங்கள் தோறும் நேரடியாக சென்று மனுக்களை பெற்று தீர்வு காணப்படும்.

* மனுக்கள் அனைத்தும் கணினியில் பதியப்பட்டு, சம்மந்தப்பட்ட துறைக்கு ஒரு வார காலத்திற்குள் அனுப்பப்படும்.

* அம்மனுக்கள் மீது ஒரு வார காலத்திக்கிற்குள் தீர்வு எட்டப்படும். சிறப்பு திட்டத்தை செம்மையாக நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு வட்டத்திற்கு ரூ.25,000 விதம் வழங்கப்படும்.

* 29 நகரங்களில் மறு நில அளவை பணிகள் ரூ.30.29 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

* பழங்குடியின மக்கள் குடியிருப்புகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் முதற்கட்டமாக ரூ.50 கோடியில் ஏற்படுத்தப்பட்டும்.

* விழுப்புரம் இன்னாடு அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியை மேல்நிலை பள்ளியாகவும் தரம் உயர்த்தப்படும்.

* ரூ.6.43 கோடி மதிப்பீட்டில் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்

* மீனவ இளைஞர்களுக்கு நடமாடும் மீன் விற்பனை நிலையங்கள் ரூ.31.15 கோடியில் ஏற்படுத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Related Stories: