சேலம் உருக்காலையை தனியார் மயமாக்க எதிர்ப்பு: மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்

சென்னை: சேலம் உருக்கு ஆலையை தனியார் மயமாக்குவதை கண்டித்து தொழிற்சங்கத்தினர் சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து, திமுக, எல்.பி.எப், பாட்டாளி மக்கள் கட்சி, தொழிற்சங்கம் உட்பட 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் சுமார் 500க்கும் மேற்பட்டோர் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆலையை தனியார் மயமாக்க கூடாது என்று முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். முன்னதாக, இவர்கள் கோட்டை- யை நோக்கி பேரணி ஆர்ப்பாட்டம் நடத்திவதாக இருந்தது.

இதற்கு போலீசார் அனுமதி மறுக்கவே, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் உருக்காலை 1981ம் ஆண்டில் 200 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டது. தற்போது இதனுடைய சந்தை மதிப்பு கிட்டதட்ட ரூ.15,000 கோடி இருக்கும். இந்த ஆலையை நம்பி 10,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருப்பதாகவும், இதனை தனியார் மயமாக்கினால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, ஆலையை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதற்கு தமிழக அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: