ஆதிதிராவிடர் பள்ளி, விடுதிகள் பல கோடி செலவில் மேம்பாடு: அமைச்சர் அறிவிப்பு

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாவத்தில், அத்துறையின் அமைச்சர் ராஜலட்சுமி வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது:

* ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலைப்பள்ளிகளில் அறிவுத்திறன் வகுப்பறைகள் ரூ.1.12 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.

* தற்போது இயங்கிவரும் வகுப்பறைகளை மெய்நிகர் கலந்தாய்வு கற்பித்தல் முறையினை ரூ.68.15 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும்.

* ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆளுமை திறன், மொழி மற்றும் தகவல் தொடர்புத்திறன் மேம்பாட்டு பயிற்சிகள் ரூ.1.41 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.

* 100 ஆதிதிராவிடர் நல விடுதிகள் மற்றும் 50 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப்பள்ளிகளில் தங்கி பயிலும் மாணக்கர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கிட குடிநீர் சுத்திகரிக்கும் கருவிகள் ரூ.1.05 கோடி செலவில் அமைக்கப்படும்.

*  பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத்திட்டங்கள் ரூ.10 கோடி மாணியத்தில் செயல்படுத்தப்படும்.

* பழங்குடியினர் மாணவ, மாணவியரை 2 ஆண்டுகள் கல்வியல் பட்டயப் படிப்பு பயில வைத்து பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியராக பணி வழங்கப்படும். இதற்கு ரூ.35 லட்சம் ஒதுக்கப்படும்.

* 10 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப்பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகள் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

* 5 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப்பள்ளிகளில் இருக்கை வசதிகளுடன் கூடிய நூலகங்கள் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

* அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப்பள்ளிகளுக்கு ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டப்படும்.

* 20 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கு புதிய கழிவறைக் கூடங்கள் ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்படும்.

* பழங்குடியினர் உண்டி உறைவிடப்பள்ளிகளுக்கு நீள் இருக்கை, சாய்வு மேசை, கட்டில், கரும்பலகை, எழுதுகோலுடன் கூடிய வெண்பலகை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் ஒரு கோடி செலவில் வழங்கப்படும்.

Related Stories: